2024 ஜூலை 02ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-07-02 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல்
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : “பொருளாதார நிலைமாற்றம்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
D : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
E : “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
F : கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன், பா.உ. அவர்களது மறைவு தொடர்பானது
G : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
கௌரவ சனாதிபதி அவர்களின் விசேட உரை
கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக இலங்கையின் உத்தியோகபூர்வ கடன்கொடுத்தோர்களுடன் ஒப்பந்தம் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் விசேட கூற்றொன்றினை முன்வைத்தார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 யூன் 29 ஆம் திகதிய 2390/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் 2024.07.02 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) (105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக
“மருத்துவம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
(ii) (105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக
“மருத்துவம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
அதனையடுத்து, 1106 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 9ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






