இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-05-22

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “பால்நிலைசார் சமத்துவம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -  
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVII  ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை

(iv) 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(3), 8, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுகள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 44(3) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட 2024 ஏப்ரல் 29 ஆம் திகதிய 2382/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 மே 21 ஆம் திகதிய 2385/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(vi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “மாத்தறைப் பருவம் அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சாமர சம்பத் தசனாயக                    
(ii)    கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி                    
(iii)    கௌரவ சாரதீ துஷ்மந்த                    
(iv)    கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்                    
(v)    கௌரவ டீ. வீரசிங்க                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச
பொது முகாமைத்துவ பதவியணியினர் எதிர்கொள்ளும் சேவை தொடர்பிலான பிரச்சினைகள்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சேவை தொடர்பிலான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
அரச நிறுவனங்களை விற்பனை செய்தல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் - சிறந்த பேரினப்பொருளாதார முகாமைத்துவத்துக்காக நிதிக் கொள்கையை மேம்படுத்தும் நோக்குடன் பகிரங்க நிதிசார் முகாமைத்துவக் கட்டமைப்பில் பகிரங்க நிதிகளின் பொறுப்புக்கூறுதுல், மேற்பார்வை செய்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; நிதிசார் முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட நிறுவனஞ்சார் பொறுப்புக்களை தெளிவுபடுத்துவதற்கும்; வரவு செலவுத்திட்ட முகாமைத்துவத்தினை வலுப்படுத்துவதற்கும், நிதிக் கொள்கை மற்றும் நிறைவேற்றத்தின் பொதுமக்கள் நுனித்தாராய்வினை வசதிப்படுத்துவதற்கும்; 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பாகம் II இன் 8 ஆம் மற்றும் 14 ஆம் பிரிவுகளை நீக்குவதற்கும்; 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைததுவ (பொறுப்பு) சட்டத்தினை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது

(ii)    பொருளாதார நிலைமாற்றம் - பொருளாதார நிலைமாற்றம் மீதான தேசியக் கொள்கைக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், இலங்கை பொருளாதார ஆணைக்குழு, இலங்கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வியாபாரத்திற்கான அலுவலகம், தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு, இலங்கைப் பொருளாதார மற்றும் சர்வதேச வியாபாரத்திற்கான நிறுவகம் ஆகியவற்றை தாபிப்பதற்கும், 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தை நீக்கஞ் செய்வதற்கும், அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i)    அரசியலமைப்புக்கான இருபத்தியிரண்டாவது திருத்தம்
(ii)    பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டில் சட்ட ஆட்சியின் சீர்குலைவு” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சட்டத்தரணி லக்ஷமன் கிரிஎல்ல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1625 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom