2024 மே 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-05-10 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ (திருமதி) டயானா கமகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக அமர்வதற்கு தகைமையற்றவராக மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவரின் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதுடன் அதனை நிரப்புவதற்காக கெளரவ மொஹமட் முஜிபுர் ரஹுமான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2021/2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) “தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ யூ. எல். எம். பாரூக்
(ii) மறைந்த கௌரவ அசோக ஜயவர்தன
(iii) மறைந்த கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா
அதனையடுத்து, 1349 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 13ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






