இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-05-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : “இலங்கை மின்சாரம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தல்
D : வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
E : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


கௌரவ சனாதிபதி அவர்களின் விசேட உரை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் விசேட கூற்றொன்றினை முன்வைத்தார்.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தொழில்நுட்ப  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ கனக ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல                
(ii)    கௌரவ அநுர திசாநாயக்க    -    மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நலின் பிரனாந்து அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பால்நிலைசார் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் மீதான தேசிய கொள்கையினை வகுத்தமைப்பதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும்; பால்நிலைசார் நோக்குநரை நியமிப்பதற்கு அல்லது பெயர் குறிப்பதற்கும்; வேறுபட்ட பால்நிலைசார் அடையாளங்களைக் கொண்ட ஆட்களின் பால்நிலைசார் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோவிளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“பால்நிலைசார் சமத்துவம்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மன்னாரிலுள்ள வங்காலை மற்றும் இதர கிராமங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாத்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1736 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom