இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஏப்ரல் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-04-02

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : “தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
C : “இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : “பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
E : “இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
F : “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
G : “வைட் றோஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
H : “சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LV ஆம் பகுதியையும் ;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LV ஆம் பகுதியையும் ;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் L ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான தேயிலை சக்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் வருடாந்த அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32(1) ஆம் பிரிவின் கீழ் மதுபான உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கான வர்த்தக நேரங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 08 ஆம் திகதிய 2361/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2023)
(ix)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 22 ஆம் பிரிவின் கீழ்  மதுபானங்கள் மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு,  2023 டிசம்பர் 31 ஆம் திகதிய 2364/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2023)
(x)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 31 ஆம் திகதிய 2364/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 31 ஆம் திகதிய 2364/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(xii)    2010 ஆம் ஆண்டின் 17 ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 ஆம் பிரிவின் கீழ்  சீட்டாட்டத் தொழில் உரிமமளித்தல் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 சனவரி 12 ஆம் திகதிய 2366/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii)    2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் 182(2)(அ) ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 சனவரி 12 ஆம் திகதிய 2366/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய  51 ஆம் பிரிவின் கீழ்  மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 சனவரி 24 ஆம் திகதிய 2368/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(xv)    2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 01 ஆம் திகதிய 2369/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    2010 ஆம் ஆண்டின் 17 ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 ஆம் பிரிவின் கீழ்  சீட்டாட்டத் தொழில் உரிமமளித்தல் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 02 ஆம் திகதிய 2369/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி.
(xvii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 15 ஆம் திகதிய 2371/33 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii)    2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மார்ச் 06 ஆம் திகதிய 2374/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 17 ஆம் திகதிய 2371/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.02.01 முதல் 2024.02.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வஜிர அபேவர்தன        -    மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ ஜயரத்ன ஹேரத்             -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே                   
(iv)    கௌரவ உதயன கிரிந்திகொட        -     இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

தேயிலை கைத்தொழிற்துறையில் நிலவும் பிரச்சினைகள்

கௌரவ பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பணம் செலுத்தல் குறித்த கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ செல்வராசா கஜேந்திரன் 

காவல்துறையினரால் தனக்கு ஏற்பட்ட அநீதி


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களுக்கு “சிவ வணக் அரண மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    வங்கித்தொழில் (திருத்தச்) சட்டமூலம்
(ii)    கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் கீழ் கட்டளை - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 55; எதிராக 19)
(iv)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவைக்கான ஆதரவு மற்றும் வசதிகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஏப்ரல் 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom