2024 மார்ச் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-03-22 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : தவிசாளர் குழாமில் சேவையாற்றுவதற்கான உறுப்பினர்
B : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
I : பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
J : பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
K : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த நிதி அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(viii) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 117(2)(ண) ஆம் பிரிவின் கீழ் கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் விமானங்களுக்கு இலங்கை வழங்கும் விமான வழிச்செலுத்தல் வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைவகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 12 ஆம் திகதிய 2362/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ விஜித ஹேரத் - ஐந்து மனுக்கள்
(ii) கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024 சனவரி 12 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 யூன் 22 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
(ii) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024 சனவரி 12 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 யூலை 18 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ ஆர்.எம். கருணாரத்ன
(ii) மறைந்த கௌரவ பந்துல பஸ்நாயக்க
(iii) மறைந்த கௌரவ (டாக்டர்) பி.எம்.பீ. சிறில்
ஒத்திவைப்புப் பிரேரணை
“விவசாயிகள் தங்கள் நெல் அறுவடையை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஏப்ரல் 01ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






