இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-03-20

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : அரசாங்கக் கணக்குகள் பற்றிய  குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : வழிவகைகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான "பாராளுமன்ற உறுப்பினர்கள் வெகுசன ஊடகங்களை பயன்படுத்தும் போது முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் சட்டப் பின்னணி" எனும் தலைப்பிலான கருத்தரங்கு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை

(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரச தொழிற்சாலைத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான       119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கடற்றொழில் அமைச்சின் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிரசன்ன ரணதுங்க              -     இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                    
(iii)    கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(iv)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மேற்சொன்ன வினாவிற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம்

மேற்சொன்ன வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாக 2024.02.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
(ii)    சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2024.02.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 21ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom