2024 பெப்ரவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-02-20 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
(iv) 2020/2021 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(viii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசாங்க சேவை ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுகப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுடனும் இயைபான ஒழுங்குபடுத்தும் அதிகார சபைகளுடனான கலந்தாலோசனையுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு 2023 நவம்பர் 17 ஆம் திகதிய 2358/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2371/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2371/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xii) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.12.21 முதல் 2023.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154R (4) இன் பிரகாரம் நிதி ஆணைக்குழுவினால் கௌரவ சனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள்
(xiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் விதப்புரையுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமொன்றை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2352/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் விதப்புரையுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமொன்றை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2352/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் 4 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் காடு வேளாண்மை ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையத்திற்கும் (ICRAF) இடையிலான புரவலர் நாட்டு உடன்படிக்கை IV, V, VI, IX, X, XI, XII, XIII, XIV, XV மற்றும் XVI இன் விதிமுறைகளைச் செயற்படுத்துவது தொடர்பான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2348/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ கஞ்சன விஜேசேகர
மின்சார கட்டணம் தொடர்பாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ள பொய்யான அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு ஒழுங்கமைப்பிற்கான (யுனெஸ்கோ) தேசிய ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 1 முதல் 7 வரையான விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் 8 மற்றும் 9 ஆம் இலக்க விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi) கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(viii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(ix) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
அதனையடுத்து, 1651 மணியளவில் பாராளுமன்றமானது 2024 பெப்ரவரி 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






