2024 பெப்ரவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-02-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கல் திட்ட மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
அரசு நிறுவனங்களை மறுசீரமைத்தல்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ அநுராத ஜயரத்ன
உடபலாத பிரதேச செயலாளரின் நடத்தையால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல்
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 ஆகஸ்ட் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 மே 20 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
(ii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு இருபத்தெட்டு (28) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-
1. பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
3. தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
5. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
6. முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
8. கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
9. கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
10. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
11. வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
12. சுகாதாரஅலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
14. கமத்தொழில் அலுவல்கள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
15. வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
16. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
17. சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
18. கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
19. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
20. வெளிநாட்டலுவல்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
21. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
22. மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
23. சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
24. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
25. நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
26. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
27. பொது மக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
28. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் மேலும் ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(iii) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2024 பெப்ரவரி 08 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவொன்று பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக.
அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அவ்வமைச்சுசார் ஆலோசனைக் குழு, உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
அவ்வமைச்சுசார் ஆலோசனைக் குழுவினது கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(iv) சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(v) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் இருபத்தாறு (26) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(vi) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் பிரதிச் சபாநாயகர் குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (9) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(vii) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(viii) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் இருபது (20) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(ix) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(x) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவானது தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் முப்பத்தொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xi) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தெட்டு (28) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(xii) வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xiii) பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xiv) வழிவகைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வழிவகைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.
(xv) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருப்பத்து மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(xvi) பின்வரிசை உறுப்பினர் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பின்வரிசைக் குழுவானது, அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான், தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர் களையும் எதிர்க்கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அகில எல்லாவல அவர்களுக்கு “மோகன் எல்லாவல சமூக அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான பிரகடனம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 பெப்ரவரி 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






