இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 பெப்ரவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-02-08

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ சனத் நிசாந்த அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ எல். கே. ஜகத் பிரியங்கர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : “பயங்கரவாத  எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரிற்காக தவிசாளர் குழாமில் உள்ளடக்கப்படவுள்ள உறுப்பினர்கள்
D : கௌரவ சனத் நிசாந்த, பா.உ. அவர்களின் மரணம் தொடர்பானது
E : புதிய பாராளுமன்ற படைக்கல சேவிதரின் நியமனம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கைகள்
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.
(iii)        2022 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி முகாமைத்துவ அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் வருடாந்த அறிக்கை.
(v)        2022 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரெல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கை.
(vi)        2022 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொறியியற் பேரவையின் ஆண்டறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை

(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 சனவரி 11 ஆம் திகதிய 2366/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xii)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 பெப்ரவரி 03 ஆம் திகதிய 2369/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xiii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுகங்கள் வழங்கல் வசதிகள்,  இயந்திரப் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv)    (218 ஆம் அத்தியாயமான) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் 77அ(6) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 27 ஆம் திகதிய 2360/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xv)    அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை நிலக்கரி தனியார் நிறுவனம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் ‘லங்காதீப’ செய்தி அறிக்கை


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) தெரிவுக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காக தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(ii)    தெரிவுக் குழு

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் போது தெரிவுக் குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் சேவையாற்றுவார்களாக:—

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்
கௌரவ காமினி லொக்குகே
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 பெப்ரவரி 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom