2024 ஜனவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-01-24 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
D : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(iii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் VII ஆம் பகுதியுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 28 ஆம் திகதிய 2338/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24 மற்றும் 24அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 05 ஆம் திகதிய 2352/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வஜிர அபேவர்தன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ ஜயரத்ன ஹேரத்
(iii) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலகு-ரயில் போக்குவரத்து திட்டம், உரம் இறக்குமதி, சர்க்கரை மீதான வரி மற்றும் நிலக்கரி மற்றும் எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1977 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பிரிவிடல் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பிரிவிடல் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களுக்கு மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 நவம்பர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 108; எதிராக 62)
(ii) இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(v) மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து புதிய புனர்நிர்மாண முன்மொழிவுத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தொடர்பான பிரேரணை
படைக்கலச் சேவிதர் ஓய்வுபெற்றுச் செல்லுதல் பற்றிய சபாநாயகர் அவர்களினால் அறிவிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்தினால் அவரது சேவை நலன் பாராட்டுதல் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து, 1941 மணியளவில் பாராளுமன்றமானது 2024 பெப்ரவரி 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






