இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜனவரி 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-01-12

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ வாசலதிலக கெதர நயன பிரியங்கர வாசலதிலக அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
B : கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXVIII மற்றும் XXXIX  ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் XIX, XX மற்றும் XXI ஆம் பகுதிகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் ─ V ஆம் பகுதி ─ இலங்கையில் புகையிரதக் கடவைகளுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பினைத் தாபித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

B.
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVII மற்றும் XXXVIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XX மற்றும் XXI ஆம் பகுதிகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் ─ V ஆம் பகுதி ─ இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் தொகுதியை உச்ச இயலளவில் பயன்படுத்தும் செயலாற்றல் தொடர்பான கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின் நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆண்டறிக்கை

(iii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் பிரதம நீதியரசரின் ஒருமைப்பாட்டுடன் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 14 ஆம் திகதிய 2362/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவை தனியார் கம்பனி தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண
(ii)    கௌரவ விமலவீர திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

மண்சரிவு காரணமாக முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் ஏனைய தேவைப்பாடுகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பாடசாலை மாணவர்களுக்கான பருவகால சீட்டு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ பிரேமலால் ஜயசேக்கர 

கடலில் அகழ்வாராய்ச்சி கப்பல்களில் நடாத்தப்பட்ட குற்றம் சாட்டப்படுகின்ற விருந்து தொடர்பானது


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 ஏப்ரல் 18 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக

(ii) இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல்

நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக நகர்ப்புற மற்றும் கிராமிய சமூகம் பெரும் நிலைகுலைவுக்கு உட்பட்டுள்ளமையினாலும், நுண்நிதி மற்றும் குத்தகை கடன் தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களின் தூண்டுதல் காரணமாக கடன் பெற்றுக்கொண்டுள்ள ஏராளமான குடும்பங்கள் தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளமையினாலும், அந்த நிறுவனங்களின் வட்டி வீதங்கள் பல்வேறு அளவுகளில் காணப்படுவதனாலும், குத்தகை கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் பல்வேறுபட்ட அழுத்தங்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளாவதனாலும், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் நிறுவனங் களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு  அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரரிக்கின்றது.

•    உள்நாட்டு அரிசி வகைகளின் போசாக்குக் குணம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டல்

தற்போது இலங்கையிலுள்ள சந்தைகளில் கிடைக்கின்ற பழைய உள்நாட்டு அரிசி மற்றும் தற்போது பயன்படுத்தப்படுகின்ற புதிய அரிசி வகைகளின் போசாக்குக் குணம் தொடர்பாகவும், பல்வேறு நோய்களால் பீடிக்கப் பட்டுள்ளவர்கள் நுகர வேண்டிய அரிசி வகைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் விவசாயிகள் அத்தகைய நெல் வகைகளை பயிரிடுவதற்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துதல்

இலங்கையின் தேயிலைப் பயிர்ச் செய்கையானது பெருந்தோட்டங்கள் மற்றும் தேயிலை சிறு தோட்டங்கள் ஆகிய இருவழி முறைகளைக் கொண்டமைந்திருப்பதனாலும், இதில் பெருந்தோட்ட முறைமையானது ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வருவதனாலும், பெருந்தோட்ட முறைமையில்  மேற்கொள்ளப்படும் தேயிலை பயிர்ச் செய்கையினை சிறு தோட்ட முறைமையாக மாற்றியமைத்து குறித்த தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை, சிறு தோட்ட  உரிமையாளர்களாக்குவதன் மூலம் அவற்றினை முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம்  பிரேரிக்கின்றது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ வேலு குமார்
(ii)    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய


அதனையடுத்து, 1513 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom