2024 ஜனவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-01-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்ற சேவை இடைநிறுத்தம் தொடர்பானது
D : இரண்டு புதிய பாராளுமன்ற ஒன்றியங்களை தாபித்தல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIX ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது-
• நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் - VI ஆம் பகுதி; மற்றும்
• லிட்ரொ கேஸ் லங்கா லிமிடெட் (LGLL) கம்பனியால் 2022/2023 ஆம் ஆண்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட திரவ பெற்றோலிய வாயு (LPG) பெறுகைகள் தொடர்பான விசேட அறிக்கையின் - VII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(viii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ix) 2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(x) 2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தொழிற்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2021/2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் ஆண்டறிக்கை
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான செலெசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xv) 2021 ஆம் ஆண்டுக்கான ஜீஎஸ்எம்பீ தொழில்நுட்பச் சேவைகள் (பிரைவேட்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(xvi) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
(xvii) 2022 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(xviii) 2021 ஆம் ஆண்டுக்கான இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்
(xix) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இந்துப் பண்பாட்டு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xx) 2022 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 நவம்பர் 01 ஆம் திகதிய 2356/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.11.01 முதல் 2023.12.19 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxiii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 சனவரி 03 ஆம் திகதிய 2365/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையிலும் அதன் அட்டவணையிலும் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xxiv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கமத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxv) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 61 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 60 ஆம் பிரிவின் கீழ் பிரதம நீதியரசரின் ஒருமைப்பாட்டுடன் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 30 ஆம் திகதிய 2238/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxvi) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 61 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 60 ஆம் பிரிவின் கீழ் பிரதம நீதியரசரின் ஒருமைப்பாட்டுடன் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதிய 2303/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரள அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நலின் பிரனாந்து
(ii) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(iii) கௌரவ விஜித ஹேரத் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
வீட்டு அலகுகள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை எதிர்கொள்ளும் பொருளாதார தாக்கம் மற்றும் மின்சார சட்டமூலம் தொடர்பான விடயங்கள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ அமைச்சர்கள் பதிலளித்தனர்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ அநுராத ஜயரத்ன
அம்புலுவாவ அறக்கட்டளை தொடர்பான திவயின பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் - பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் பதிவு அதிகாரசபையைத் தாபிப்பதன்மூலம் அசைவுள்ள ஆதனத்திலான பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு படுத்துவதற்கான நிறுவனரீதியிலான கட்டுக்கோப்புக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய அதிகாரசபையின் தத்துவங்களையும் கடமைகளையும் எடுத்துக்கூறுவதற்கும்; கடனாளிகளினது அசைவுள்ள ஆதனத்திற்கு மல்லுக்கட்டும் பிணைப்பொறுப்புரிமைகளைக் கொண்டுள்ள அக்கடன் கொடுநர்களுக்கிடையே முன்னுரி மைகளைத் தீர்மானிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; பிணைப்பொறுப்பு உடன்படிக்கைகளுக்கான திறத்தவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் எடுத்துக்கூறுவதற்கும்; அசைவுள்ள ஆதனத்திலான பிணைப் பொறுப்பு உரிமைகள் பதிவகமொன்றைத் தாபிப்பதற்கும் பேணுவதற்கும்; 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க, பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(ii) காலவிதிப்பு (திருத்தம்) - (68 ஆம் அத்தியாயமான) காலவிதிப்புக் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்) - (86 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv) ஈட்டுச்சட்டம் (திருத்தம்) - (89 ஆம் அத்தியாயமான) ஈட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(v) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்) - 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க, நிதி குத்தகைக்கு விடுதல் சட்டத்தினைத் திருத்துவதற்கானது
(vi) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) - 1990 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு சட்டத்தைத் திருத்துவதற்கானது
(vii) கம்பனிகள் (திருத்தம்) - 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(viii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்) - (117 ஆம் அத்தியாயமான) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ix) நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை - இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும்; பணக் கடன் வழங்கு தொழிலையும் நுண்நிதித்தொழிலையும் ஒழுங்குபடுத்துவதற்கும்; பணக் கடன் வழங்கு தொழிலினதும் நுண்நிதித்தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும்; 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(x) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தம்) - (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன.:-
(i) தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 48; எதிராக 7)
(ii) தேசிய நீரளவை சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல்
(iv) இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v) இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறி திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பிரதேச மற்றும் மாவட்ட மட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான பொறிமுறைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கபில அதுகோரள அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1744 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 10ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






