2023 டிசம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-12-12 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் மூன்று அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சுதத் மஞ்சுல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ புத்திக பத்திறண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ இம்ரான் மஹ்ரூப்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சேதனப் பசளை இறக்குமதி குறித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பாக 2023.12.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2023 ஒக்டோபர் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை, பாராளுமன்ற நிலையியற்கட்டளை 102 இன் பிரகாரம் 2024 மார்ச் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அவர்களுக்கு “பிரக்ஞாபந்து புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்தைந்தாவது நாள் - குழு நிலை விவாதம்
(ii) கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான விசேட நுழைவுப் பரீட்சை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வேலு குமார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1838 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 13ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






