2023 நவம்பர் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-11-30 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம்” தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமாக செயலமர்வு
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
(ii) கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஊட்டச்சத்து குறைபாடு, நிதி நிறுவன கடன்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ சுகாதார அமைச்சர் மற்றும் கௌரவ முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) 1990 சுவசெரிய அறக்கட்டளையின் வருடாந்த அறிக்கை (2022)
(iii) விஜய குமாரதுங்க நினைவு மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை (2021)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சமூக ஊடகங்கள் மூலம் மோசடிகளை கட்டுப்படுத்த நிகழ்நிலை வர்த்தக சட்டத்தை கொண்டு வரல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உதயன கிரிந்திகொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 01ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






