ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2022-09-02 |
2022 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் (இன்று) நிறைவேற்றப்பட்டது.
இங்கு, ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. மேலும் 43 பேர் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர குமார திஸாநாயக்க ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு வாக்கெடுப்பை கோரியமைக்கு அமைய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான ஆரம்ப உரையை கடந்த 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் மேற்கொண்டதுடன் அதனை அடுத்து ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 31, செப்டம்பர் 01 மற்றும் இன்று இடம்பெற்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






