இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன – பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க

திகதி : 2021-01-11

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொவிட் 19 தொற்றுநோய்க்கு உள்ளாக்கியுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய ஆலோசனைகளைப் பெற்றிருப்பதாகவும், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்த சகல இடங்களையும் கிருமிநீக்கத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற பணியாளர்கள் எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்டு பி.சி.ஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற வளாகத்திலேயே பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பாராளுமன்ற பணியாளர்கள் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றி கடமைகளை முன்னெடுத்து வருவதாகவும், இந்த நிலைமையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும் தஸநாயக்க குறிப்பிட்டார்.

அதேநேரம், அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கும் நோக்கில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது.

இதில், சாபாநயகர் மற்றும் கட்சித் தலைவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல செயலகம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom