சபை அலுவல்கள் |
திகதி : | 2008-07-08 |
கெளரவ பியங்கர ஜெயரத்ன பிரதிச் சபாநாயகராகவும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மனுக்களின் சமர்ப்பணம்
"சிவில் விமானச் சேவைகள்" சட்டமூலம்
நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சரும், துறைமுக மற்றும் விமானச் சேவைகள் அமைச்சருமானவர், சிவில் விமானச் சேவைகள் தொடர்புடைய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளைச் செய்யவும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சமவாயங்களுக்கு தாக்க விளைவை அளிப்பதற்கும், அதனுடனும் தொடர்புடைய மற்றும் அதன் இடைநேர் விளைவான விடயங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கான சட்டமூலத்தைக் கொண்டு வந்தார்.
பிரேரணை முன்னறிவிப்புகள்
ஆலோசனைக் குழுக்களும், சட்டவாக்க நிலையியற் குழுக்களும்
(அ) பெயரிடப்பட்டு அமைக்கப்படுவதற்காக நியமிக்கப்பட வேண்டிய பின்வரும் ஐம்பத்தைந்து (55) ஆலோசனைக் குழுக்களுக்கான உறுப்பினர் பெயர் நியமனஞ் செய்யப்பட வேண்டும் என்றும் –
(1) மத மற்றும் ஒழுக்க மேம்பாட்டு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(2) பாதுகாப்பு, பொதுகமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய ஆலோசனைக் குழு
(3) நிதி திட்டமிடல் பற்றிய ஆலோசனைக் குழு
(4) தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பற்றிய ஆலோசனைக் குழு
(5) உள்ளக நிருவாகம் பற்றிய ஆலோசனைக் குழு
(6) பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய ஆலோசனைக் குழு
(7) நீதி சட்ட மறுசீரமைப்பு பற்றிய ஆலோசனைக் குழு
(8) சுகாதார நலத்துறை, போசணைபற்றயி ஆலோசனைக் குழு
(9) துறைமுகங்கள், விமானச்சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(10) பெற்றோலியம், பெற்றோலியவள அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(11) நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(12) கமத்தொழில் அபிவிருத்தி, கமநலச்சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(13) கல்வி பற்றிய ஆலோசனைக் குழு
(14) பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(15) இளைஞர் வலுவூட்டுகை, சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(16) தபால் தொலைத் தொடர்புகள் பற்றிய ஆலோசனைக் குழு
(17) நகர அபிவிருத்தி, புனிதப் பகுதிகள் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(18) சமூக வேகைள், சமூக நலனோம்புகை பற்றிய ஆலோசனைக் குழு
(19) வீடமைப்பு பொதுவசதிகள் பற்றிய ஆலோசனைக் குழு
(20) சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு பற்றிய ஆலோசனைக் குழு
(21) நீர் வழங்கல், வடிகாலமைப்புப் பற்றிய ஆலோசனைக் குழு
(22) விஞ்ஞான, தொழில்நுட்பவியல் பற்றிய ஆலோசனைக் குழு
(23) அரசியல் அமைப்பு அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு பற்றிய ஆலோசனைக் குழு
(24) மீள் குடியமர்த்துகை, அனர்த்த நிவாரண சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(25) திட்டச் செயற்படுத்துகை பற்றிய ஆலோசனைக் குழு
(26) துணைப் பயிர் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(27) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(28) ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(29) மின்வலு, சக்தி பற்றிய ஆலோசனைக் குழு
(30) சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டுகை பற்றிய ஆலோசனைக் குழு
(31) தொழில்முயற்சி அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக் குழு
(32) மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிரத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(33) காணி, காணி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(34) இளைஞர் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(35) மக்கள் தொடர்பாடல், தகவல் பற்றிய ஆலோசனைக் குழு
(36) சுதேச மருத்துவத்துறை பற்றிய ஆலோசனைக் குழு
(37) தொழில் உறவுகள், மனித வலு பற்றிய ஆலோசனைக் குழு
(38) விளையாட்டுத்துறை, பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(39) வர்த்தகம், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி கூட்டுறவுத்துறை, நுகர்வோர் சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(40) அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(41) நிர்மாணத்துறை பொறியியல் பற்றிய ஆலோசனைக் குழு
(42) சுற்றுலாத்துறை பற்றிய ஆலோசனைக் குழு
(43) வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக் குழு
(44) வாழ்க்கைத் தொழில், தொழிற்பயிற்சி பற்றிய ஆணைக் குழு
(45) கிராமியக் கைத்தொழில், சுயதொழில் ஊக்குவிப்புப் பற்றிய ஆலோசனைக் குழு
(46) உள்ளூராட்சி, மாகாணசபைகள் பற்றிய ஆலோசனைக் குழு
(47) கடற்றொழில், நீரக வளமூலங்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(48) கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(49) வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(50) கலாசார அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு
(51) உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் குழு
(52) நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைக் குழு
(53) கைத்தொழில் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
(54) போக்குவரத்து பற்றிய ஆலோசனைக் குழு
(55) சுற்றாடல் இயற்கை வளங்கள் பற்றிய ஆலோசனைக் குழு
நிலையியற் கட்டளை 109 இன் பிரகாரம், அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அத்தகைய விடயங்களைப் பரிசீலித்து அறிக்கையிடுவதற்கு, ஒவ்வொரு குழுவும் ஐந்துக்குக் (5) குறையாத, முப்பத்தொன்றிற்கு (31) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்றாக (3) இருக்கும் என்றும்;
(ஆ) நியமிக்கப்படவிருக்கும் இரண்டு சட்டவாக்க நிலையியற் குழுக்களும் நிலையியற் குழு "அ" மற்றும் நிலையியற் குழு "ஆ" என பெயரிடப்படும் என்றும்;
ஒவ்வொரு குழுவும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட சட்டமூலத்தைப் பரிசீலிக்கையில், மேலதிகமாக பதினைந்திற்கு (15) மேற்படாத உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ள சபாநாயகருக்கு அதிகாரமளிக்கப் பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் ஏழு (7) ஆக இருக்க வேண்டும் என்றும் கெளரவ சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
சபைக்குழு
நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாது, சபைக்குழு, சபாநாயகரைத் தவிசாளராகவும், தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) பேரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் என்று பாராளுமன்ற சபை முதல்வர் கொண்டுவந்த பிரேரணைக்குச் சபை இணங்கியது.
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
123 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
124 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாலாசன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க கணக்குக் குழு
125 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் அரசாங்க கணக்குக் குழுவானது தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
126 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
சிறப்புரிமைகள் பற்றிய குழு
127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பொது மனுக் குழு
128 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொதுமனுக் குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
"அமைச்சர்கள், மாகாணசபைகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரசிற்கு சொந்தமான தொழில் முயற்சிகள், நிறுவனங்கள், ஆகியவற்றிற்கு பணியாட்டொகுதியினரை ஆட்சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளை கூட்டிணைப்பதற்கும் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்ட மூலத்தை" சமர்ப்பிப்பதற்கு கெளரவ. பியசிறி விஜயநாயக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சபையின் இன்றைய பிரதான அலுவல்
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்டவாறான (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக்கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகளை 2008 யூலை மாதம் 02 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிக்கப்படுமாகவென பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அவசரகால நிலையை மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 97 பெரும்பான்மை வாக்குகளோடு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 111 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 14 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.
தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
அதனையடுத்து 16.35 மணியளவில் பாராளுமன்றமானது 2008 யூலை 09 ஆந் திகதி புதன்கிழமை 09.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






