இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-06-20

சட்ட மூலங்கள் சமர்ப்பணம்

"சீன வம்சாவழியினரான ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்கல் (விசேட ஏற்பாடுகள்)" எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலம்

பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்றச் சபை முதல்வர், சீன வம்சாவழியினரான ஆட்களுக்கு இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலத்தை சபையில் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்

"வாழ்க்கைத் தொழில்சார் தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகம்" எனத் தலைப்பிடப்பட்ட

சட்டமூலமானது இரண்டாம் மதிப்பீட்டிற்கென எடுக்கப்பட்டுத் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.

"நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழான விதிமுறைகள்"

நகர அபிவிருத்தி, புனிதப் பகுதிகள் அபிவிருத்தி அமைச்சரின் சார்பாக, சபையின் அனுமதியுடன் பாராளுமன்றச் சபை முதல்வரால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

"கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் மன்றம் (கூட்டிணைத்தல்)"
"தெகிவளை, நெதிமாலை பெளத்த கலாச்சார நிலையம் (கூட்டிணைத்தல்)"

ஆகிய சட்டமூலங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுச் சபையில் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கொழும்பு – கண்டி நெடுஞ்சாலை அபிவிருத்தி கருத்திட்டத்தின் காரணமாக பேராதனை கெற்றம்பே ராஜோப்பவனாராமயவுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மீதான ஒத்திவைப்புப் பிரேரணையானது கெளரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து 15.00 மணியளவில் பாராளுமன்றமானது 2008 ஜூலை 08ஆந் தேதி செவ்வாய்க்கிழமை 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom