இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-06-17

நகர அபிவிருத்தி, புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சர் கெளரவ தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானாக நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்!

பிரேரணை முன்னறிவித்தல்கள்

தெரிவுக்குழு

2008.06.06ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தற்போதைய கூட்டத்தொடரின்போது தெரிவுக்குழுவின் தவிசாளராக இருக்கும் சபாநாயகர் அவர்களுக்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்படும் இருபத்து மூன்று (23) உறுப்பினர்கள் அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்களாக என பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

கெளரவ நிமல் சிறிபால த சில்வா
கெளரவ மைத்திரிபால சிறிசேன
கெளரவ ஆறுமுகன் தொண்டமான்
கெளரவ தினேஷ் குணவர்த்தன
கெளரவ டக்ளஸ் தேவானந்தா
கெளரவ (திருமதி) பேரியல் இஸ்மாயில் அஷ்ரஃப்
கெளரவ கரு ஜயசூரிய
கெளரவ பி.சந்திரசேகரன்
கெளரவ ஏ.எல்எம்.அதாஉல்லா
கெளரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
கெளரவ டியூ குணசேகர
கெளரவ (வண) அதுரலியே ரதன தேரர்
கெளரவ எம்.ஜோசப் மைக்கல் பெரேரா
கெளரவ ரவி கருணாநாயக்க
கெளரவ லக்ஷ்மன் கிரியெல்ல
கெளரவ ரஞ்சித் அலுவிஹாரே
கெளரவ அநுர திஸாநாயக்க
கெளரவ விஜித ஹேரத்
கெளரவ இராஜவரோதயம் சம்பந்தன்
கெளரவ சுரேஷ் பிரேமச்சந்திரன்
கெளரவ மொகமட் ஷபீக் ரஜாப்தீன்
கெளரவ பைஸால் காசிம்
கெளரவ மங்கள சமரவீர

இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்கள்

"குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு" என்னும் தலைப்பிலான சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் 2008 ஜூன் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைப்புப்பிரேரணை

"அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ ஜோசப் மைக்கல் பெரேராவினால் பிரேரிக்கப்பட்டது.

அதன் பின்னர் பாராளுமன்றம் பி.ப.1526 மணிக்கு 2008 ஜூன் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom