‘சட்டவாக்க மேற்பார்வை மற்றும் நிறைவேற்று ஒத்துழைப்பின் ஊடாக கண்காணிப்பு முறைமையொன்றினை உருவாக்குதல்’ பற்றிய செயலமர்வு |
திகதி : | 2018-02-16 |
ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயக பங்கேற்பு (House Democracy Partnership - HDP) உடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தினால் ‘சட்டவாக்க மேற்பார்வை மற்றும் நிறைவேற்று ஒத்துழைப்பின் ஊடாக கண்காணிப்பு முறைமையொன்றினை உருவாக்குதல்’ பற்றிய செயலமர்வு பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பங்கேற்புடன் 2018 பெப்ரவரி மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்ற குழு அறை இல. 01 இல் நடைபெற்றது.
நிறைவேற்று மற்றும் சட்டவாக்கம் இடையே மேற்பார்வை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அறிவினை பரிமாற்றிக் கொள்வதே இச்செயலமர்வின் பிரதான குறிக்கோளாகும். HDP இன் ஆரம்ப பணியாட்டொகுதி உறுப்பினரான திரு. பிரெட் ஸ்மித் மற்றும் சர்வதேச குடியரசு நிறுவனத்தின் (IRI) HDP நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு. ஸ்கொட் நெமெத் ஆகியோர் இச்செயலமர்வின் வளவாளர்களாகப் பங்கேற்றனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









