PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

அரச தலைவர்கள்

மன்னர்கள்
VI ஆம் ஜோர்ஜ் மன்னர் 04 பெப்ரவரி 1948 - 06 பெப்ரவரி 1952
மகா தேசாதிபதி:  
சேர் ஹென்றி மொன்ங் மேசன் மூர் 1944 - 1949
அதி கௌரவ சோல்பரி இளங்கோமகன் 1949 - 1952
   
II ஆம் எலிசபெத் மகாராணி 1952 - 1972
மகா தேசாதிபதி:  
அதி கௌரவ சோல்பரி பிரபு 1952 - 1954
சேர் ஒலிவர் ஏனஸ்ட் குணதிலக 1954 - 1962
கௌரவ வில்லியம் கொபல்லாவ 1962 - 1972

 

ஜனாதிபதி
மேதகு வில்லியம் கொபல்லாவ 1972 - 1978

 

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
மேதகு ஜே. ஆர். ஜயவர்தன 04 பெப்ரவரி 1978 - 02 ஜனவரி 1989
((நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதிப் பதவியானது 1972 ஆம் ஆண்டின் இலங்கை (சிலோன்) அரசியலமைப்பிற்கான இரண்டாவது திருத்தத்தினால் உருவாக்கப்பட்டது).
(இது 78.02.03 ஆம் திகதிய 302/14 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 78.02.04 ல் அமுலுக்கு வந்தது)
 
மேதகு ரணசிங்க பிரேமதாச 02 ஜனவரி 1989* - 01 மே 1993
*(88.12.21ன் 537/3 இலக்க வர்த்தமானி)
 
மேதகு டி. பி. விஜயதுங்க 07 மே 1993 - 12 நவம்பர் 1994
(பிரதம அமைச்சர் பதவியை வகித்த மேதகு டி. பி. விஜயதுங்க அவர்கள் ஜனாதிபதி பிரேமதாச அகால மரணமானதைத் தொடர்ந்து பதில் சனாதிபதியாக 93.05.01ல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பின் 40 வது உறுப்புரையின் கீழ் (93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி) பாராளுமன்றத்தால் சனாதிபதிப் பதவிக்கு அவர் 1993.05.07 இல் தெரிவு செய்யப்படும் வரை இப் பதவியை வகித்தார்).
(93.05.08ம் திகதிய 765/17 இலக்க வர்த்தமானி)
   
மேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 12 நவம்பர் 1994 - 19 நவம்பர் 2005
 
மேதகு மஹிந்த ராஜபக்க்ஷ 19 நவம்பர் 2005* - 09 ஜனவரி 2015
* (2005.11.19ம் திகதிய 1419/12 இலக்க வர்த்தமானி)
   
மேதகு மைத்திரீபால சிறிசேன 09 ஜனவரி 2015* - 16 நவம்பர் 2019
* (2015.01.10ம் திகதிய 1896/29 இலக்க வர்த்தமானி)
   
மேதகு கோட்டாபய ராஜபக்‌ஷ 17 நவம்பர் 2019* - 14 ஜூலை 2022**
* (2019.11.21ம் திகதிய 2150/41 இலக்க வர்த்தமானி)
** இராஜினாமா செய்தார்
   
மேதகு ரணில் விக்கிரமசிங்க 20 ஜூலை 2022 - 22 செப்டெம்பர் 2024
(2022-07-14 அன்று ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதம அமைச்சர் பதவியை வகித்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அரசியலமைப்பின் 40வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி பதவிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2022.07.20ம் திகதிய 2289/34 இலக்க வர்த்தமானி). 2022.07.20 வரை இவர் பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார்.)
   
மேதகு அநுர குமார திசாநாயக்க 22 செப்டெம்பர் 2024* -
* (2024.09.23ம் திகதிய 2403/03 இலக்க வர்த்தமானி)

Share This On

Last Updated on 24-09-2024

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom