PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

படைக்கலச் சேவிதரின் அலுவலகம - பாதுகாப்பு

 


பாதுகாப்பு

பாராளுமன்ற வளாகத்தின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவர் படைக்கலச் சேவிதராவார். அத்துடன் பாராளுமன்றமானது, அத்துமீறல்கள், விபத்துக்கள், தீ போன்ற ஆபத்துக்களினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் இவரையே சாரும். இக்கடமைகளைச் சரிவர நிறைவேற்ற, சுமார் 235 அதிகாரிகளைக் கொண்ட பாராளுமன்ற பொலிஸ் பிரிவு இவருக்கு தமது உதவிகளைச் செய்யும்.

படைக்கலச் சேவிதரானவர், தகுந்த அதிகாரிகளின் உதவியுடன், பாராளுமன்ற ஊழியர்களுக்கு அவ்வப்போது, ஓர் ஒழுங்கான முறையில், வெடி குண்டுகளைக் கண்டறிதல் மற்றும் தீயணைப்புப் பற்றிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வார்.

 

வெளியாள்களுக்கான அநுமதி

பாராளுமன்ற வளாகத்தினுள் வெளியாள்கள் வருவதைக் கட்டுப்படுத்துபவர் படைக்கலச் சேவிதராவார். வருகை தருபவர்கள், பாராளுமன்றத்தினுள் அநுமதிக்கப்படுமுன் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் பார்வையாளர் கூடங்களில் இருக்கும் போது சில விதிகளுக்குக் கட்டுப்படவும் அவர்கள் சம்மதிக்க வேண்டும். விசேட பார்வையாளர்கள், சபா நாயகரின் பார்வையாளர் கூடத்தில் அமர்த்தப்படுவதுடன் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பரிசோதனைக்கே உட்படுத்தப்படுவர். பொதுப் பணி அதிகாரிகள், அவர்களுக்கென, சபா மண்டபத்தின் அருகே காணப்படும் விசேட பொதுப் பணி அதிகாரிகளுக்கான பார்வையாளர் கூடங்களில் அமர்ந்து கூட்ட அலுவல்களைக் கவனிப்பர். தேவையான நேரங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வர்.

சபா நாயகரின் ஆசனத்துக்குப் பின்னால், ஊடகவியலாளர்களுக்கான விசேட பார்வையாளர் கூடம் காணப்படுகிறது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரின் சிபாரிசுடன் வந்தால் இவர்களுக்கு அநுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இவ்வகைப் பார்வையாளர்களை விட பெருந்தொகையான மக்கள், விசேடமாக பாடசாலை மாணவர்கள், பாராளுமன்றம் அமர்வில் இருக்கும் போதும் அமர்வில் இல்லாத நாள்களிலும் பாராளுமன்றத்திற்கு வருகை தருவர்.



பார்வையாளர் கூடங்களை மேற்பார்வை செய்தல்

பார்வையாளர் கூடங்களுக்குள் பிரவேசிப்பவர்கள் அனைவரும் அநுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருப்பதையும், பொருத்தமான உடை அணிந்திருப்பதையும், அவர்கள் மரியாதையுடன் நடந்துகொள்வதையும் உறுதிப்படுத்துவதும் படைக்கலச் சேவிதரின் கடமையாகும். பார்வையாளர்கள், அலுவல்களைக் குழப்பாதிருப்பதையும், உறுப்பினர்களுக்கு தடங்கல் விளைவிக்காமலிருப்தையும் இவர் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பார்வையாளர்கள், பாராளுமன்ற வளாகத்தினுள் அநுமதியற்ற இடங்களில் அலையாமல் இருப்பதையும் இவர் உறுதி செய்ய வேண்டும்.

 

இட ஒதுக்கீடு

அலுவலக அறைகள், குழு அறைகள், நேர்முகப் பரீட்சைகளுக்கான அறைகள், வசதிகள், அவற்றின் நிருவாகம் என்பனவற்றிற்கு படைக்கலச் சேவிதரே பொறுப்பானவராவார். எந்தவோர் உறுப்பினருக்காவது குழு அறையோ அல்லது நேர்முகப் பரீட்சைகளுக்கான அறையோ தேவைப்படின் அவ்வாறான வசதிகளை படைக்கலச் சேவிதரிடம் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

 

சர்வதேசத் தொடர்புகள்

பொது நலவாயப் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் சங்கத்தில், படைக்கலச் சேவிதர் அங்கம் வகிக்கிறார். பாராளுமன்ற நிருவாகம் தொடர்பான நவீன அபிவிருத்திகளை அறிந்து கொள்வதற்காக இவர், இச்சங்கத்தின் கூட்ட அமர்வுகளுக்கு ஒழுங்காக சமுகமளிப்பார்.

 

படைக்கலச் சேவிதர்கள்

 

எம். இஸ்மயில்,எம்.பி(B).ஈ 1947 - 1961

 

.ஏ.ஜெ.ஆர். த சில்வா 1961 - 1970

 

ரொனி அபேசிங்க 1970 - 1996

 

விஜய பள்ளியகுருகே 1996 - 2006

 

அனில் பி(P). சமரசேகர 2006 - இன்று வரை

மேலே செல்ல

Share This On

Last Updated on 04-09-2018

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom