இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

610/2025

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முன்னைய நிர்வாகங்களின் கீழ், அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் இனத்துவக் கருதுகோள்களின் அடிப்படையில் சில உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் நிறுவப்பட்டதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) புதிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபிப்பதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் தெரிவடிப்படைகள் யாதென்பதையும்;

(iii) புதிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபிப்பதில் இன ஆக்கவமைவு ஓர் தெரிவடிப்படையாகக் கருதப்படுகின்றதா என்பதையும்;

(iv) உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபிப்பதில் இன அல்லது அரசியல் கருதுகோள்களை விட சனத்தொகை அடர்த்தி, புவியியற் காரணிகள் மற்றும் நிர்வாகச் சாத்தியவளம் (உத்தியோகபூர்வ பதிவுகளின் நிர்வாக மொழி உள்ளடங்களாக) போன்ற புறநிலைத் தெரிவடிப்படையாக அமைவதனை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom