509/2025
கௌரவ உபுல் கித்சிறி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தை அண்மித்ததாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வளவை கங்கைக்குக் குறுக்காக லியன்கஸ்தொட்ட பாலம் நிர்மாணிக்கப் பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் நிறைவுசெய்யப்படவிருந்த திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி பாலத்திற்கான மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iv) அப்போது குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்குப் பொறுப்பாக செயற்பட்ட அமைச்சு/நிறுவனம் யாது என்பதையும்;
(v) பாலம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்ந அமைச்சர் யாரென்பதையும்;
(vi) இன்றளவில் மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளனவா என்பதையும்;
(vii) மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பின், அதன் காரணமாக நாசமடைந்துள்ள பொருட்கள் யாவை என்பதையும்;
(viii) அவற்றின் பெறுமதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : உபுல் கித்சிறி | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






