இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சேன நாணாயக்கார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

496/2025

கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் இலங்கையில் ஔிபரப்பாகும் இலங்கைக்குரிய தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி எண்ணிக்கை, அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் எனும் அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iii) அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வெகுசன ஊடகங்களுக்காக நெறிமுறைக் கோவையொன்று காணப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) மேற்படி நெறிமுறைக் கோவை இலங்கைக்குரிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதையும்;

(iii) தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்றளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தொடர்பாக எவ்வாறு கவனம் செலுத்தப்படுகின்றதென்பதையும்;

(iv) மேற்படி நிகழ்ச்சிகள் தொடர்பாக புலனாய்வு ரீதியான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;

(v) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: சேன நாணாயக்கார
: தேசிய மக்கள் சக்தி
2025-03-18 ஆம் திகதி 1 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது
2025-05-20 ஆம் திகதி 1 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom