491/2025
கௌரவ (பேராசிரியர்) எல். எம். அபேவிக்ரம,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நில்வலா கங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பு காரணமாக எழுந்துள்ள சமூக, பொருளாதார மற்றும் சூழல் பிரச்சினைகள் குறித்து 2024.11.08 தொடக்கம் 2025.01.14 வரையிலான காலப்பகுதியினுள் கற்றாராய்ந்து, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அல்லது நீர் வளங்கள் சபை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளதா;
(ii) ஆமெனில், இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்துள்ளதா;
(iii) ஆமெனில், அதன் உறுப்பினர்கள் யாவர்;
(iv) இன்றளவில் அக்குழு நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது;
(v) அக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் திகதி யாது;
(vi) மேற்படி குழு இதுவரையில் நியமிக்கப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : எல்.எம். அபேவிக்ரம | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






