இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

481/2025

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் பாடநெறியொன்று இல்லாததுடன், ஒவ்வோர் கல்லூரியிலும் வெவ்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் ​பாடநெறியொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில், அதற்கான வேலைத்திட்டம் யாதென்பதையும்;

(v) மேற்குறிப்பிட்ட பொதுப் பாடநெறியை மற்றும் விரும்பிய வேறு ஏதேனும் பாடமொன்றை பயில்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom