இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இயலாமை உடைய நபர்களின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பம்

திகதி : 2024-05-07

இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத்திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் மாத்தரை மாவட்டத்தில் ஆரம்பமானது.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ மற்றும் குறித்த ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ புத்திக பத்திரண, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள், மாத்தறை மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகள், மாத்தறை மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து மாவட்ட மட்டத்தில் யோசனைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமைய கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இயலாமையுடைய நபர்களின் சமூகத்தினருக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதால், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்களில் தலையிட்டு பாரிய பங்களிப்பை வழங்க ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

1 2

3 4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom