இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

திகதி : 2024-04-26

புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய, இத்தாலி குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக எஸ்.ஏ.ரொட்றிகோ அவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்தது.

அத்துடன், நீர் வளங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஏ.சி.எம். நஃபீல் அவர்களின் நியமனத்துக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அவர்களின் நியமனத்துக்கும், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராக என்.கே.எஸ்.ஜயசேகர அவர்களின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அமைச்சர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன, கெளரவ விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom