இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2024-04-02

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அது தொடர்பான அவதானிப்புகளை குழுவின் தலைவர் முன்வைத்தார்.    

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி)சரத் வீரசேகர தலைமையில் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (மார்ச் 22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தமது அவதானிப்புகளை முன்வைத்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், 'பயங்கரவாதம்' எனும் பதம் சட்டமூலத்தில் வரைவிலக்கணம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். 'பயங்கரவாதம்' எனும் பதம் சரியாக வரைவிலக்கணம் செய்யப்படாமல் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழான அனைத்துக் குற்றங்களையும் பயங்கரவாதக் குற்றங்களாக குறிப்பிட முடியாது என குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், சர்வதேச ரீதியில் கூட 'பயங்கரவாதம்' எனும் பதம் சரியாக வரைவிலக்கணம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

சட்டமூலத்தை முன்னுரையுடன் 3(1) மற்றும் 3(2) பிரிவுகளை ஆராயும் போது பயங்கரவாதம் தொடர்பில் வரைவிலக்கணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமூலத்தில் உள்ள பல குற்றங்கள் குற்றவியல் குற்றங்களுடன் மேற்பொருந்துவதாக இதன்போது தலைவர் குறிப்பிட்டார். அத்துடன், இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்பான சட்டங்கள் ஏற்கனவே இருக்கும் போது, ஏன் புதிய சட்டமூலத்திலும் பிரதி செய்யப்பட்டுள்ளது என இதன்போது குழு வினவியது.

இந்தச் சட்டமூலத்தின் அடிப்படைக்கு இப்போது திருத்தம் மேற்கொள்ள முடியாது எனவும் குழு நிலையின் போதும் பயங்கரவாதம் தொடர்பில் வரைவிலக்கணத்தை உள்ளடக்க முடியாது எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை ஆய்வு செய்த குழு இன்னும் இரண்டு வாரங்களில் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது.

குழுவின் உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

2 7

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom