நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தயாரிக்கப்படவுள்ள சாசனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பல தரப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன |
திகதி : | 2024-03-25 |
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் சாசனமொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டது. உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உப்புல் கலப்பதி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இந்தச் சந்திப்புக்களில் சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதற்கமைய, சுகாதாரத் துறையில் உள்ள கட்டுப்பாட்டு அதிகாரிகள், சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் தனித்தனியாகக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்டறிந்துகொள்ளப்பட்டது. பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு வரும்நிலையில், துறைசார் பல்வேறு தரப்பினரையும் உபகுழு சந்தித்து வருகின்றது.
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்படும் சாசனத்தின் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், ஒட்டுமொத்த சுகாதாரத் துறையினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான சாசனமொன்று தயாரிக்கப்பட வேண்டிதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கிலான சாசனத்துக்கான வரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இதன் அடிப்படையிலேயே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இந்தக் குழுக்களுடன் விரிவாக ஆராயப்பட்டன.
இந்தச் சந்திப்புக்களில், பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) கயஷான் நவனந்த மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








