இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது

திகதி : 2022-06-10

2022 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களும் கலந்து கொண்டதுடன், இலங்கை மின்சார சட்டத் திருத்தம் தொடர்பில் மேலும் திறந்த விவாதமொன்றை நடத்துவது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இத்திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி மிகச் சரியான தீர்மானத்திற்கு வருவது முக்கியம் என கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இச்சட்டமூலம் அமுல்படுத்தப்படுவற்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்ட சகல விடயங்களையும் தெளிவுபடுத்துவது முக்கியமானது எனவும் இவ்விடயங்களை காலதாமதமின்றி பொறுப்புடன் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளுவது முக்கியமானது என ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதன் போது சட்டம் மாத்திரமன்றி தொழில்நுட்ப மற்றும் சட்ட விடயங்களில் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் உள்நாட்டு முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பது முக்கியம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கினார். மேலும்  மின்சார சபை மற்றும் நிலையான எரிசக்தி அதிகாரசபை குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிதிதித்துவத்தையும் உள்ளடக்கியவாறு அமைவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தற்போதைய மின்சார நெருக்கடிக்கு தீர்வாக, நாட்டில் இயற்கை நீர்வளங்கள் மற்றும் காற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான விரைவான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், கூரைகளில் சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை களஞ்சியப்படுத்தும் திட்டத்தை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதன் முக்கியம் பற்றி குழுவில் அவதானம் செலுத்;தப்பட்டது. இதன்போது இத்திட்டம் தொடர்பில் திட்டவரைபை எதிர்வரும் காலங்களில் ஆலோசனைக் குழுவின் முன்வைக்க எதிர்பாரத்;துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் நீர் மின் நிலையங்கள் நிலவும் நீர் பற்றாக்குறை தொடர்பிலும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் பாராளுமன்றத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை வழங்குதல் மற்றும் எரிபொருள்  விநியோகத்தில் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உட்பட பெருமளவிலான பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom