இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 மே 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-05-12

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தேசிய பேரவையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவினால் தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட, அதன் முதலாவது இடைக்கால அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கபீர் ஹஷீம்                    
(ii)    கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார        -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ நிபுண ரணவக                                     -     ஏழு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு காரணமாக பங்குச் சந்தை, ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 2023.05.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்ஹ அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

((i) முதல் (iii) ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(ii)    நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும கொடுப்பனவுத் திட்டம்
(iii)    இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு


அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom