இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-05-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்  
C : “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
F : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல் 


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIII ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

(v) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 22 ஆம் பிரிவின் கீழ் மதுபானங்கள் மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 07/2022)
(viii)    2004 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க புகையிலை வரி (திருத்தச்) சட்டத்தின் திருத்தப்பட்டவாறான 1999 ஆம் திகதிய 8 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் 2 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 21 ஆம் பிரிவின் கீழ் பீடிக்கான புகையிலை வரியொன்றினை விதித்தல் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix)    2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/73 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் 155(1) ஆம் பிரிவின் கீழ் கொழும்புப் பங்குச் சந்தையின் “Over the Counter Platform” மீது மேற்கொள்ளப்படும் தாபனப் படுகடன் பிணையங்களிலுள்ள ஒவ்வொரு கொள்வனவுப் பரிமாற்றங்கள் மீது அறவிடப்பட வேண்டிய செஸ் வரி விகிதம் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 26 ஆம் திகதிய 2316/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(xi)    2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ், புறப்படுகை வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 09 ஆம் திகதிய 2309/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ், புறப்படுகை வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2314/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 26 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 22 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர் அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 01 ஆம் திகதிய 2312/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 51 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதிய 2312/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 51 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிய 2318/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xvi)    2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.03.01 முதல் 2023.03.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xvii)    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து திரு. ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரத்நாயக்கவை நீக்குகின்ற உத்தேசம் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 7 ஆம் பிரிவின் கீழான அமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் அது தொடர்பான இணைப்புகள் I மற்றும் II
(xviii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மனித உயிரியல் விஞ்ஞானத்துறையினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 மார்ச் 02 ஆம் திகதிய 2321/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 52 ஆம் பிரிவின் கீழ் பொதுப் பாதுகாப்பு அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல          -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அஜித் மான்னப்பெரும        -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ கிங்ஸ் நெல்சன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i) முதல் (v) வரையான பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(ii)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள்
(iv)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(v)    ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 10ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom