இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஏப்ரல் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-04-25

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்  
C : கௌரவ செஹான் சேமசிங்ஹ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
D : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
F : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
H : மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
I : பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
J : சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
K : சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
L : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
M : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
N : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -      
•    2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் ;
•    2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் ;
•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXX ஆம் பகுதியையும் ;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் ;
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXX ஆம் பகுதியையும் ;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV, XLVI, XLVII மற்றும் XLVIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XXXVI, XXXVII  மற்றும் XXXVIII ஆம் பகுதிகளையும்;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIII, XLIV, XLV, XLVI மற்றும் XLVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XX, XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XXXIV, XXXV  மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX, XXX, XXXI, XXXII, XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XXII, XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
(vii)        2016 , 2017, 2018 , 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை அச்சக நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix)        2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் ஆண்டறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xiv)    2021 ஆம் ஆண்டுக்கான ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை

(xv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023  மார்ச் 24 ஆம் திகதிய 2324/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xvi)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 மார்ச் 28 ஆம் திகதிய 2325/06 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2326/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(xviii)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 ஏப்ரல் 17 ஆம் திகதிய 2328/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கணினி பீடத்தில் மென்பொருள் பொறியியல் துறை, தரவு விஞ்ஞானத்துறை மற்றும் கணக்கிடலும் தகவல் முறைமைகளும் மற்றும் பிரயோக விஞ்ஞானங்கள் பீடத்தில் இயற்கை வளங்கள் துறை, பௌதீக விஞ்ஞானங்கள் மற்றும் தொழில்நுட்பவியல் துறை, உணவு விஞ்ஞானங்கள் மற்றும் தொழில்நுட்பவியல் துறை மற்றும் விளையாட்டு விஞ்ஞானமும் உடற்றொழில் கல்வித்துறை போன்றவற்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 27 ஆம் திகதிய 2312/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்ககைகளில்  வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சிச்சாலைகள் திணைக்களம்  தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  சுகாதார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பிரனாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண                    
(ii)    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்திற்கான நட்டஈடு

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் அமைச்சர் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உரிமைகளியும் உரித்துடைமைகளையும் எடுத்துக்கூறுவதற்கும்; அத்தகைய உரிமைகளையும் உரித்துடைமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்; குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உதவிக்கானதும் பாதுகாப்புத் தொடர்பானதுமான தோதான சர்வதேச மரபுகளுக்கும், நியமங்களுக்கும், மிகச்சிறந்த செயல்முறைகளுக்கும் பயன்கொடுப்பதற்கும்; குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவு அத்துடன் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உதவி மற்றும் பாதுகாப்பு நிதியம் என்பவற்றைத் தாபிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஏப்ரல் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு “மாகாணசபை தோ்தல்கள் (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அத்தியாவசியப் பொருட்கள், ஹோட்டல் மற்றும் பேக்கரி பொருள் விற்பனை நிலையங்களுக்கான தரங்களை அறிமுகப்படுத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1812 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஏப்ரல் 26ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom