2023 மார்ச் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-03-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “இலங்கை கட்டிட சேவைகள் பொறியிளல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B : “ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
C : அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுதல்
D : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான புத்தசாசன நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iii) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(3) ஆம் உறுப்புரையின் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் 8(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 24 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 29 ஆம் திகதிய 2308/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(3) ஆம் உறுப்புரையின் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 7(3), 8, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 15 ஆம் திகதிய 2310/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, நுவரெலியா, அநுராதபுரம், களுத்துறை, கிளிநொச்சி, இரத்தினபுரி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(vi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் — செலவினத் தலைப்பு இல. 4 தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2321/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் காட்சு — ஹய்லி அட்வான்ஸ்ட் மெடிகல் டெக்னொலொஜி டிறெய்னிங் சென்ரர் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படுகின்ற வியாபார பகுப்பாய்வுவில் சிறப்பு முகாமைத்துவ இளமாணி, எஸ்எல்ரி கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படுகின்ற சிவில் பொறியியலில் சிறப்புப் பொறியியல் விஞ்ஞான இளமாணிப் பட்டம் மற்றும் சிவில் பொறியியலில் கௌரவ பொறியியல் விஞ்ஞான இளமாணிப் பட்டம், நாகானந்த இன்டர்நஷனல் இன்ஸ்டிடியூட் வோர் புடிஸ்ட் ஸ்டடிஸ் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படுகின்ற மானுடவியலில் கௌரவ இளங்கலைமாணி மற்றும் பிரயோகத் தொடர்பாடல் மற்றும் ஊடகத் தொழில்நுட்பவியலில் கௌரவ இளங்கலைமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 01 ஆம் திகதிய 2308/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்சிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (கறன்டி) லிமிடெட் நிறுவனத்தினால் (SLIIT) வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணிப் பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 13 ஆம் திகதிய 2310/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சிவில் விமான சேவைச் சட்டத்தின் 6(3)(அ) மற்றும் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 117(2)(ட) ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதிய 2303/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சிவில் விமான சேவைச் சட்டத்தின் 117(2) மற்றும் 117(3) ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 02 ஆம் திகதிய 2304/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii) 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 48 ஆம் பிரிவின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 சனவரி 05 ஆம் திகதிய 2313/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
கௌரவ சனாதிபதி அவர்களின் விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் நாட்டில் பொருளாதார நடைமுறை குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் விசேட கூற்றொன்றினை முன்வைத்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துதல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் மற்றும் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கை மத்திய வங்கியைத் தாபிப்பதற்காகவும்; (422 ஆம் அத்தியாயமான) பணச்சட்டத்தை நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கை மத்திய வங்கி”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்த பண்டார அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 08ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






