இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 பெப்ரவரி 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-02-21

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : 29 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
I : வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
J : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
K : வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
L : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
M : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
N : தெரிவுக் குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV  மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVII ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும் ;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது  தொகுதியின் இலங்கை மின்சார சபையினால் ஏஸ் பவர் எம்பிலிபிட்டிய தனியார் கம்பனியிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்தல் தொடர்பான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட அறிக்கை தொடர்பிலான அறிக்கையின் - I ஆம் பகுதி

B.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள  விசேட வணிக நிறுவனம் தொடர்பிலான 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நாற்பத்து மூன்றாவது வருடாந்த அறிக்கை
(vi)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2020 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க நினைவு மருத்துவமனையின் ஆண்டறிக்கை
(viii)        2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xi)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2021 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xiv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 19 ஆம் திகதிய 2315/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvi)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 பெப்ரவரி 17 ஆம் திகதிய 2319/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xvii)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 8, 10, 14, 15, 18, 19அ, 30, 37, 42, 139இ, 139ஏ, 195 மற்றும் 231 ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 14 ஆம் திகதிய 2306/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி அமைச்சு, நீதிமன்ற நிருவாகத் திணைக்களம், உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களம், கடன் நிவாரண சபைத் திணைக்களம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட ஆணைக்குழுத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியன தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

தெரிவுக் குழு

2023 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் மற்றும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கத்துவ உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் போதான தெரிவுக் குழுவில் பின்வரும் ஐந்து (05) உறுப்பினர்களும் சேவையாற்றுவார்களாக:—

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் கீழ் நான்கு ஒழுங்குவிதிகள்
(ii)    கம்பனிகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள்


அதனையடுத்து, 1016 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 22ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom