2022 நவம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-11-22 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XX ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII மற்றும் XIX ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IX, X, XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIV ஆம் பகுதியையும்;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XL மற்றும் XLI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXII, XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தெகுதியின் XVIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIV, XXV மற்றும் XXVI ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI, VII, VIII, IX, X, XI மற்றும் XIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் III, IV, V, VI மற்றும் VII ஆம் பகுதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சுற்றுலா விசாவுடன் வெளிநாட்டு வேலை தேடும் வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பாக கூற்றொன்றினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2023) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 23ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






