2022 செப்டெம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-09-02 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் சேதனப் பசளை மெற்றிக் தொன் 96,000 பெறுகை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் - V ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(vi)அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) (190 அத்தியாயமான) அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் 7ஆம் மற்றும் 8 ஆம் பிரிவுகளின் கீழ் தபால் கட்டணம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட யாப்பு விதி
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சின் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம்
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 120; எதிராக 05), ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இன்று ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள்
(iii) வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்
அதனையடுத்து, 1807 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






