இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022 மார்ச் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2022-03-10

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(ii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நெடுஞ்சாலைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா                    
(ii)    கௌரவ விஜித ஹேரத்                                     -                    மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ றோஹண திஸாநாயக்க                    
(iv)    கௌரவ அனுப பஸ்குவல்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வன்முறை மற்றும் துன்புறுத்தல் உடன்படிக்கை 190 (C190) சான்றிதழ் தொடர்பாக 2022.03.08 அன்று ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் கீழ் கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு தொழில் அமைச்சர் கௌரவ (கலாநிதி) நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ ஜயந்த கெட்டகொட

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவ பால் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை சம்பந்தமாக பொய்யான செய்தி


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடைவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“மின்சக்தி மற்றும் வலுசக்தி தொடர்பில் நாட்டில் நிலவும் நெருக்கடி” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நலீன் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom