இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை பாராளுமன்றக் குழுவின் இந்தியாவுக்கான விஜயம்

திகதி : 2018-09-11

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு 2018 செப்டெம்பர் 9-14 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்தது. இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற நட்புறவினை மேலும் வலுப்படுத்த இவ்விஜயத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இத்தூதுக்குழுவானது இந்தியக் குடியரசின் பிரதம அமைச்சர் அதிமேதகு நரேந்திர மூடியினால் அழைக்கப்பட்டது மட்டுமன்றி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீமதீ சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடலிலும் 2018 செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று ஈடுபட்டது.

 

இலங்கை தூதுக்குழுவில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ., நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரஊப் ஹகீம், பா.உ., காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ., தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன், பா.உ., பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பா.உ., கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ., கௌரவ விஜித ஹேரத், பா.உ. மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

 

1 2

3 4

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom