இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் அரச நிறுவனங்களை மதிப்பீடு செய்வற்காக அதி மேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் வைபவம் – 2018

திகதி : 2018-09-05

கணக்காய்வாளர் அதிபதியினால் அரச நிறுவனங்கள் விசாரணை செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கைகளைப் பரிசீலனை செய்யும் சம்பிரதாய ரீதியான முறையியலை அனுசரித்து இலங்கைப் பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் மேற்பார்வைக்கு உட்படும் சகல நிறுவனங்களினதும் நிதிக் கட்டுப்பாடு பற்றிய சட்டதிட்டங்களுக்கும் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக செயலாற்றுகை தொடர்பான தகவல்கள் ஒரு கணனி வலையமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், கணக்காய்வாளர் அதிபதியின் திணைக்களத்தின் மூலம் அத்தகைய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பெறுமானமாக்கலுக்கு ஏற்ப அதிக செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களை மதித்து கௌரவிக்கும் பொருட்டு ஒரு தேசிய விருது வழங்கும் வைபவம் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

2016 ஆம் நிதி ஆண்டுக்குரிய பாராளுமன்றத்தின் கணனி வலையமைப்புத் தகவல் முறைமையினூடாக நாடு முழுதிலும் பரந்திருக்கின்ற மத்திய அரங்கத்தின் சகல அமைச்சுக்கள், சகல திணைக்களங்கள், விஷேட செலவுப் பிரிவுகள், சகல மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பன அடங்கலாக 837 நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பல வகுதிகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட, குறித்த நிதி ஆண்டில் உன்னத செயலாற்றுகையை காண்பித்த 101 நிறுவனங்களுக்கு தேசிய விருதுகளை வழங்கும் வைபவமொன்றை 2018 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 05 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் 1 ஆவது குழு அறையில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த நிகழ்வின் பிரதான அதிதியாக மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும் கௌரவ சபாநாயகர் அவர்களும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom