இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஆயுத ஒழிப்பு பற்றிய மாநாட்டில் யப்பான் தூதுவர் பாராளுமன்றத்தில் சுற்றுலா

திகதி : 2018-06-11

ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு பற்றிய மாநாட்டில் யப்பானின் அதிவிசேட தூதுவர் மற்றும் பூரண பலமிக்க நிரந்தர பிரதிநிதி அதிமேதகு நொபுசிகே டகமிஸாவா அவர்கள் யுத்த ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் (ATT) உலகளாவிய பணிக்காக இன்று இலங்கைக்கு வருகை தந்தார். அவருடைய சுற்றுலாவின் போது பாராளுமன்றத்திற்கு வருகை தந்து கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை சந்தித்து யுத்த ஆயுத வர்த்தக உடன்படிக்கைக்கு இலங்கையின் சேர்க்கையின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடினார். அவருடன் யுத்த ஆயுத வர்த்தக உடன்படிக்கையின் செயலாளர் காரியாலயத்தின் பிரதானி திரு. துமிஸானி லட்லா அவர்களும், ஜெனீவா ஆயுத ஒழிப்பு பற்றிய மாநாட்டிற்கு யப்பான் நிரந்தர பிரதிநிதி முதலாவது செயலாளர் திருமதி. யோகோ ஒவடாரி மற்றும் இலங்கைக்கான யப்பான் தூதுவர் காரியாலயத்தின் பதில் தூதுவர் திரு. யாகீ அவர்களும் தூதுக்குழுவில் அடங்கியிருந்தனர்.

 

1  2

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom