இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2018-05-09

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த சட்டமூலம் கௌரவ நீதி அமைச்சரினால் 2018 மார்ச் மாதம் 06 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதாகும். சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2018 ஏப்ரல் 03ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

 

இச்சட்டத்தின் 6வது உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தவறு சம்பந்தமாக எவரேனும் ஒருவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டிற்காக குறித்து நியமிக்கப்படுகின்ற வழக்கு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படுவதற்கு, வழக்கு விசாரணை செய்ய மற்றும் தீர்மானம் எடுக்க இதன் மூலம் வாய்ப்பளிக்கப்படுகின்றது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom