இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பிரதம அமைச்சர் மீதான நம்பிக்கையின்மை நிராகரிக்கப்பட்டது

திகதி : 2018-04-04

pmபிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் நிராகரிக்கப்பட்டது. பி.ப. 9.30 மணிக்கு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, இப்பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

55 ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிட்டு 2018 மார்ச் 21ஆம் திகதியன்று கௌரவ சபாநாயகர் அவர்களிடம் “நம்பிக்கையின்மை பிரேரணை” சமர்ப்பிக்கப்பட்டதுடன் பின்னர் இது 2018.03.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(7)ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகமான குறிப்புகள், இலங்கை மத்திய வங்கியில் நிகழ்ந்த பிணைமுறி தொடர்பானதாகும்.

 

பிரதம அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையின்மை விவாதிக்கப்படுவது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது தடவையாகும்; இதற்கு முன்னைய சந்தர்ப்பங்கள் 1957 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளிலாகும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom