இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜெனீவாவிலுள்ள அனைத்துப் பாராளுமன்ற ஒன்றிய பேரவையில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய உரையாற்றினார்

திகதி : 2018-03-27

ஜனீவாவில் 2018 மார்ச் 24-28 வரை நடைபெற்று கொண்டிருக்கின்ற அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் 138வது அமர்வில் இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் பேரவையில் உரை நிகழ்த்தினார்.

 

இந்த பேரவையில், 65 பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் 216 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 740 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 6.5 பில்லியன் மக்களின் நலன்களை புதிய குடியேற்ற ஆட்சியின் மீதான உலகளாவிய பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகும். ஐக்கிய நாடுகளினால் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்படவுள்ள ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட உலகளாவிய உடன்படிக்கைகளில் உள்நாட்டு ஊக்குவிப்பை உறுதி செய்வதற்கான அவர்களின் பங்களிப்பைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் விரிவாக ஆராயவுள்ளனர்.

 

இலங்கை தூதுக்குழுவில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சருமான கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார, பா.உ., மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ., கௌரவ ஈ. சரவணபவன், பா.உ., கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ., மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

 

1 2

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom