அரசியலமைப்பு சபை வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்திற்கு மேலதிக நேரத்தை ஒதுக்க சபாநாயகர் தீர்மானம்

திகதி : 2017-11-02

Print

ஒவ்வொரு கட்சியினதும் அனைத்து பிரதிநிதித்துவங்களை உள்ளடக்கி சமர்ப்பிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை பற்றிய கலந்துரையாடலுக்காக ஒக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 01ஆம் திகதிகள் முன்னதாக ஒதுக்கப்பட்ட போதிலும் விவாதத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் பெரிய தேவைப்பாடு இருப்பதைக் கருத்திற் கொண்டு கௌரவ சபாநாயகர் அவர்கள் மேலதிக நேரத்தை ஒதுக்க தீர்மானித்துள்ளார். அவ்வகையில், இன்றும் எதிர்வரும் கிழமையின் நவம்பர் 8ஆம் திகதியும் அதாவது வரவு செலவுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள தினத்திற்கு முன்னைய தினத்தையும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த விவாதத்தில் கருத்துத் தெரிவிப்பதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுவதனால், இதற்காக தமக்கு போதிய நேரத்தினை ஒதுக்கித் தருமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அவர்களை கேட்டுக் கொண்டனர்.

 

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் காட்டிய ஆர்வத்தை பாராட்டிய சபாநாயகர், நாட்டிற்காக அதி முக்கியமான விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பத்தில் செயலூக்கத்துடன் அதில் கலந்து கொண்டு ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ கருத்துத் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவரது கடமையை நிறைவேற்றுதல் என சுட்டிக் காட்டினார். அனைவருக்கும் பாராளுமன்றத்தினுள் கருத்துத் தெரிவிப்பதற்காக உரிமையை பாதுகாத்து போதிய காலத்தைப் பெற்றுத் தருவதாக உறுதிப்படுத்தினார்.