இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறல்

திகதி : 2017-10-03

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் முகமாக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று (ஒக்டோபர் 03) பி.ப. 02.30 மணிக்கு நடத்தப்பட்டது. பிரதான அலுவல்களின் ஆரம்பத்தில் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களினால் பின்வரும் பிரேரணை முன்வைக்கப்பட்டது;

 

“இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வில், ஒரு சுயாதீனப் பாராளுமன்றமாக அதன் முதலாவது கூட்டம் இடம்பெற்று 70 ஆவது ஆண்டு நிறைவைப் பெருமையுடன் அனுஷ்டிப்பதுடன், சனநாயக ஆட்சியில் முறியடிக்கப்படாத்தொரு சாதனையுடன் ஆசியப் பிராந்தியத்தில் உலகளாவிய வாக்குரிமையினால் தெரிவு செய்யப்பட்ட பழமையான பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் விளங்குகின்றது எனக் குறிப்பிடுகின்ற அதேவேளை, இப்பாராளுமன்றத்திற்கும் இலங்கை மக்களுக்கும் சனநாயக பாரம்பரியங்கள், கோட்பாடுகள் மற்றும் சட்டவாட்சியை மேலும் வலுப்படுத்தி சுபீட்சமும் அபிவிருத்தியும் பெற்று திகழுமாகவென இப்பாராளுமன்றம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.”

 

அதிமேதகு சனாதிபதியின் உரையை அடுத்து முறையே கௌரவ பிரதம அமைச்சர், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ சபை முதல்வர், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், கௌரவ எதிர்கட்சி முதற்கோலாசான் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சித் தலைவர்களினால் உரைகள் ஆற்றப்பட்டன. அதன் பின்னர் கௌரவ சபாநாயகர் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

 

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான சங்கத்திற்கு (SAARC) உரித்தான நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் எட்டாவது மாநாட்டிற்கு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள அந்நாடுகளின் பாராளுமன்றங்களின் கௌரவ சபாநாயகர்களும் சபாநாயகரின் கலரியிலிருந்து இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.

 

“பிரதிநிதிகள் சபை” என அழைக்கப்படும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான முதலாவது பாராளுமன்றம் கொழும்பிலுள்ள ராஜ்ய சபை கட்டிடத்தில் (பழைய பாராளுமன்ற கட்டிடம்) 1947 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் தடவையாக கூடியது. இது 101 உறுப்பினர்களை உள்ளடக்குவதுடன், இதில் 95 பேர் உலகளாவிய வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் 6 பேர் ஆளுநர்-நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டனர்.

 

பொதுத் தேர்தலானது 1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரையான 19 நாட்களுக்கு நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 42 ஆசனங்களையும், அதன் மூலம் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதுடன் நாட்டின் முதலாவது பிரதம அமைச்சராக அதிகௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். லங்கா சமசமாஜ கட்சி, போல்செவிக் லெனின்ஸ்ட் கட்சி, கமியுனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது ஆசனங்களை வென்ற ஏனைய அரசியற் கட்சிகளாகும். சுயாதீன அபேட்சகர்கள் இருபது பேரும் தெரிவு செய்யப்பட்டனர். பலங்கொட முதலாவது உறுப்பினர், கௌரவ (சேர்) அலெக்ஸாண்டர் பிரன்சிஸ் மொலமுரே, அவர்கள் சபாநாயகராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆர். சென்ட் எல். பீ. தெரணியகல அவர்கள் (சி.பி.ஈ.) பிரதிநிதிகள் சபையின் செயலாளராவார்.

 

செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை எனும் சபைகள் இரண்டைக் கொண்ட இலங்கையின் (அன்றை சிலோன்) முதல் பாராளுமன்றம் இரட்டை வாரியமாக இருந்தது. அது நிறுவப்பட்டது சோல்பரி ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் படி மற்றும் சிலோன் (அரசியலமைப்பு) சபை கட்டளையின் அடிப்படையிலுமாகும். 1931 இல் உருவாக்கப்பட்ட சிலோன் ராஜ்ய சபையின் மூலம் பிரதியீடு செய்யப்பட்டது. செனட் சபை 1971 இல் இல்லாதொழிக்கப்பட்டதுடன், 1972 இல் குடியரசு அரசியலமைப்பு செயற்படத் தொடங்கியதுடன் பிரதிநிதிகள் சபைக்கு பதிலாக தேசிய அரசுப் பேரவை அமைக்கப்பட்டது. 1978 செப்டம்பர் 7ஆம் திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இரண்டாவது தேசிய அரசுப் பேரவைக்கு பதிலாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

தற்போதைய பாராளுமன்றம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றமாவதுடன், ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் பதினேழாவதாகும். 1947 முதல் உறுப்பினர்கள் 14 பேர் பிரதம அமைச்சர் பதவியை வகித்துள்ளதுடன், 18 பேர் பாராளுமன்ற சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று வரை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பதவியில் (இதற்கு முதல் சபை செயலாளர் என அழைக்கப்பட்ட) ஏழு பேர் சேவையாற்றியுள்ளனர்.

 

தினத்தின் சபை அமர்வை பார்க்க

 

 

1947 ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதலாவது கூட்டம்

1 2

 

 

 

3 4

5 6        7

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom