இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற சேவையில் 40 வருட கால பூர்த்தியை முன்னிட்டு கௌரவ பிரதம அமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்தல்

திகதி : 2017-08-04

இந்தச் சபையின் உறுப்பினராகச் செயற்பட்டு தொடர்ச்சியாக 40 ஆண்டு காலச் சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்தச் சபையானது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், பொதுவாக நாட்டுக்கும் குறிப்பாக பாராளுமன்றத்திற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுநல நோக்குடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட சேவையை மீளாய்வுக்கு உட்படுத்தி அன்னாரின் அனைத்து எதிர்கால முயற்சிகளும் வெற்றியடைய ஆசிகளை வழங்குவதற்குமாக பிரேரணையொன்றினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.

 

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் இவ்வாறான சபை அமர்வொன்று நடாத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இன்றைய தினக் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தின் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாவார். 1977ஆம் ஆண்டு பியகம ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு (இரண்டாவது தேசிய அரசுப் பேரவை) தெரிவு செய்யப்பட்ட அவர் அதன் பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளார். இது அவர் பிரதம அமைச்சர் பதவியை வகிக்கும் நான்காவது தடவையாகும் (2015 ஆகஸ்ட் முதல் இற்றைவரை). 1993 மே முதல் 1994 ஆகஸ்ட் வரை, 2001 டிசம்பர் முதல் 2004 பெப்ரவரி வரை மற்றும் 2015 ஜனவரி முதல் 2015 ஜூன் வரை இந்நாட்டின் பிரதம அமைச்சர் பதவி அவரினால் வகிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பதவியை வகிக்கின்றார். இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு, கல்வி, நீதி, கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகாரம், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் போன்ற முக்கியமான அமைச்சுப் பதவிகள் பல அவரினால் வகிக்கப்பட்டுள்ளன. 1989 மார்ச் முதல் 1993 மே வரை பாராளுமன்ற சபை முதல்வர் பதவியையும், 1994 ஒக்டோபர் முதல் 2000 ஆகஸ்ட், 2000 செப்டெம்பர் முதல் 2000 ஒக்டோபர், 2000 ஒக்டோபர் முதல் 2001 ஒக்டோபர் மற்றும் 2004 ஏப்ரல் முதல் 2010 ஏப்ரல் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

 

இப்பாராளுமன்ற விஷேட அமர்வுக்கு முன்னதாக, பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆசி வேண்டி சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் அவரது பணியாட்டொகுதியினர் ஒழுங்கு செய்திருந்த “போதி பூஜா” ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

 

 1 2

 3 4

 5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom